Home அரசியல் 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

459
0
SHARE
Ad

najibமே 6  – நேற்று நடைபெற்று முடிந்த 13வது பொதுத் தேர்தலில் இதுவரை 112 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றுள்ள தேசிய முன்னணி மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கின்றது.

இதுவரை வெளியான அதிகாரபூர்வ முடிவுகளைக் கொண்டு தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் ஏறத்தாழ 1 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

#TamilSchoolmychoice

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில் இன்று நடைபெற்ற வாக்களிப்பில் பல குளறுபடிகள் நடந்ததாக அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்ட்சியினர் சட்டப்படி புகார் செய்யலாம் என்றும் அதனை தற்போது இருக்கின்ற சட்டங்களின் படி அரசாங்கம் எதிர் கொள்ளும் என்றும் நஜிப் கூறினார்.