Home 13வது பொதுத் தேர்தல் செப்பாங்கில் முகமட் சின் தோல்வி

செப்பாங்கில் முகமட் சின் தோல்வி

616
0
SHARE
Ad

zinகோலாலம்பூர், மே 7- சிலாங்கூரை கைபற்றுவோம்  என்று கூக்குரலிட்ட மாநில தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ முகமட் சின் முகமட்  சிப்பாங் நாடாளுமன்ற தொகுதியில் தோல்வி கண்டார்.

முகமட் சின் பின் முகமட் பெற்ற வாக்குகள் 35, 670. பாஸ் கட்சியைச் சேர்ந்த முகமட் ஹனிபா பின் மைடின் பெற்ற வாக்குகள் 36, 774 ஆகும்.

இதில், முகமட் ஹனிபா பின் மைடின் 1104 வாக்குகளில் முகமட் சின்னை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த 2008 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் தேசிய முன்னணி வென்ற வெகு சில தொகுதிகளில் ஒன்றான சிப்பாங் தொகுதியையும் இந்த 13வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கைவிட்டுள்ளது.