Home கலை உலகம் தலைவா படத்தில் நடிகர் விஜயின் புதுமையான நடனம்

தலைவா படத்தில் நடிகர் விஜயின் புதுமையான நடனம்

643
0
SHARE
Ad

vijayசென்னை,மே 06 – மதராஸப்பட்டினம் பட இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படமொன்றில் நடிகர் விஜய் நடித்துவருகிறார். இப்படப்பிடிப்பு  தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடந்து வருகிறது.

இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய விஜய் இதுவரை தான் நடித்த படங்களில் இல்லாத அளவிற்கு டேப் டான்ஸ் என்ற புதுமையான நடன அசைவுகளை ஆடி அனைவரையும் அசத்தியிருக்கிறார்.

தமிழ்நாட்டு  சினிமாவில் நடிப்போடு சேர்ந்து அசத்தலாக நடனமும் ஆடும் கலைஞர்கள் ஒரு சிலரே. அந்த வகையில், நடிகர் விஜய்க்கு நடிப்போடு சேர்த்து நடனமும் கைவந்த கலை. இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலும் அவர் நடனம் ஆடாமல் இருந்ததில்லை.

#TamilSchoolmychoice

குத்துப்பாட்டு, மேற்கத்திய நடனம் என்று எல்லா வகை நடனமும் சிறப்பாக ஆடும் வல்லமை படைத்தவர். எனவே தற்போது அவர் நடித்து வரும் தலைவா படமும் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.