Home கலை உலகம் காதல் சர்ச்சை- ஆண்ட்ரியா காதலன் ஜோடியாக சுவாதி தேர்வு

காதல் சர்ச்சை- ஆண்ட்ரியா காதலன் ஜோடியாக சுவாதி தேர்வு

944
0
SHARE
Ad

swathiசென்னை, மே 7- நடிகை ஆண்ட்ரியாவும் மலையாள நடிகர் பஹத்பாசிலும் ‘அன்னயும் நசூலும்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர்.

இப்படம் வெளியானதும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பஹக் பாசில் அறிவிப்பு வெளி யிட்டார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறினார்.

ஆண்ட்ரியாவிடம் இதுகுறித்து கேட்டபோது, பதில் சொல்லவில்லை. காதலை ஏற்க அவர் மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் ‘நார்த் 24 காதம்’ என்ற மலையாள படத்தில் பஹத் பாசில், ஆண்ட்ரியாவை மீண்டும் ஜோடியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் பஹக் பாசிலுடன் நடிக்க ஆண்ட்ரியா மறுத்து விட்டார்.

இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதில் வேறு நாயகியை தேடினர். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு சுவாதி தேர்வாகியுள்ளார்.

இவர் தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். தமிழ் படமொன்றில் தற்போது நடித்து வருவதாகவும், அந்த படம் முடிந்ததும் பஹத் பாசிலுடன் நடிப்பேன் என்றும் சுவாதி கூறினார்.