Home வாழ் நலம் வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்!

வாழைப்பழம் வழங்கும் நன்மைகள்!

532
0
SHARE
Ad

bananaகோலாலம்பூர், மே 7- “தினசரி ஒரு ஆப்பிள் போதும், வைத்தியர் வேண்டாம்” என்பது ஆங்கில அறிவுரை. அந்த ஆப்பிள் நான்குக்கு ஒரு வாழைப்பழம் சமம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மலிவு விலை வரப்பிரசாதமாக மனிதர்களுக்கு வாய்த்திருக்கிறது, வாழைப்பழம். வாழைப்பழம் நமக்கு அளிக்கும் நன்மைகள் அனேகம்.

வாழைப்பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய முக்கியமான வைட்டமின்கள் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

#TamilSchoolmychoice

பொட்டாசியம், நார்ச்சத்துகள், மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகின்றன. அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது. கொழுப்பு இல்லை.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்குச் சாந்த குணத்தை ஏற்படுத்துகிறது. டிரைப்டோபென் நியாசினாக மாற்றம் அடைந்து, உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

நம்முடைய உடலை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வாழைப்பழம் மிகவும் உதவுகிறது. மூளையில் வேதியியல் பொருட்களை சமநிலையில் வைத்துக் கொள்ள பெரிதும் துணை புரிகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலைக்கு வாழைப்பழம் உதவி புரிகிறது. நரம்புகளை சீராக வைத்துக்கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும், இதய இயக்கத்தையும் சீராக வைத்திருக்கிறது.

நம் உடலில் சுரக்கும் திரவங்களை வாழைப்பழம் சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும், நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்துக்கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கின்றன.

வாழைப்பழம் நமது உடலில் நோய் நீக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ, தேன் கலந்து சாப்பிட்டாலோ வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வாழைப்பழம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தை நமது உணவின் ஒரு பகுதியாகச் சாப்பிட்டு வருவதன் மூலம், பக்கவாத பாதிப்பு அபாயத்தை 40 சதவீதம் அளவுக்குக் குறைக்கலாம் என்று ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.