Home கருத்தாய்வு “தமிழ் இணையம் மொழி காக்கும் வேலியாக உள்ளது” – இந்தியா டுடே நேர்காணலில் முத்து...

“தமிழ் இணையம் மொழி காக்கும் வேலியாக உள்ளது” – இந்தியா டுடே நேர்காணலில் முத்து நெடுமாறன்!

962
0
SHARE
Ad

muthu-nedumaranமே 9 -செல்லியல் செய்தி சேவைத் தளத்தின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் அண்மையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகதத்தில் தமிழ் இணையம் குறித்து உரையாற்றுவதற்காக தமிழக வருகை மேற்கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் இந்தியா டுடே என்ற பிரபல வார இதழிற்கு அவர் வழங்கிய நேர்காணலை  8 மே 2013 தேதியிட்ட தனது இதழில் அந்த பத்திரிக்கை பிரசுரித்திருந்தது.

அந்த நேர்காணலை செல்லியல் வாசகர்களுக்காக இங்கே மறு பிரசுரம் செய்துள்ளோம்:-

#TamilSchoolmychoice

முரசு அஞ்சல், செல்லினம் உள்ளிட்ட முன்னோடி தமிழ் செயலிகளின் மூலம் தமிழ் இணையப் பரப்பில் முத்திரை பதித்த சிங்கப்பூரைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின்  தமிழியல், பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்த கணினி, அலைபேசியில் தமிழ்ப் பயன்பாடு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். தமிழ் கணிஞரான அவருடன் அசோசியேட் காப்பி எடிட்டர் எஸ்.செந்தில் குமார் பேசினார். அதிலிருந்து:-

 கே. இணையத்தில் தமிழ் சாதித்தது போல கைபேசி, டேப்லேட் (மின் பலகை) முதலிய கையடக்க கருவிகளில் தமிழ் முத்திரை பதிக்க முடியுமா?

ப. இணையத்தில் சாதித்ததைவிட அதிகமாக சாதிக்க முடியும். எனினும் மின் நூல் வாசிப்பு மென்பொருளும் வாசிப்பை இலகுவாக்கும் வகையில் மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

கே.ஒவ்வொரு ஆண்டும் தமிழில் பல ஆயிரம் நூல்கள் வெளியாகின்றன. அவற்றில் விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் கூட மின் நூல்கள் வருவதில்லையே?

ப. இண்டிஸைனில் வடிவமைக்கப்படும் ஒரு நூலை கணினியில் ஒரு சொடுக்கு மூலம் மின் நூலாக மாற்ற முடியும். ஆனல் ஒரு காரியத்தை இவ்வளவு எளிமையாக செய்ய முடியும் என்பதே மனத் தடைகளை உருவாக்கக்கூடும் என்பது ஒரு முரண் நகை.

கே. உங்களது இபுக் ரீடர்கள்  எனப்படும் வாசிப்பு செயலிக்கு என்ன மாதிரியான வரவேற்பு உள்ளது?

ப. அதை பயன்படுத்துவதற்காக  இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளோம். கையடக்க கருவிகளில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான  செல்லினம் அப்ளிகேஷனை அண்டிராய்டு செயலிக்கும் கொடுத்திருக்கிறோம். (ஐஃபோனுக்கு இந்த ‘அப்’ முன்பிருந்தே இருக்கிறது) நல்ல வரவேற்பு உள்ளது.

கே. செல்போனும் டேப்லெட்டும் சங்கமிக்கின்றனவா (கன்வெர் ஜென்ஸ்)? இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

ப. செல்போன், டேப் உள்ளிட்ட தனித் தனியான வார்த்தைப் பிரயோகங்கள்கூட காலாவதியாகி வருகின்றன. கையடக்க கருவிகள் என்ற பதத்தையே  நான் பிரயோகித்து வருகின்றேன். உதாரணத்திற்கு மென்பொருள் உள்ளீடு,  நீண்ட நூல்களின் வாசிப்பு தவிர்த்த பிற மின்னஞ்சல், தொலைபேசி உரையாடல் என அனைத்து வேலைகளையும் எனது கையடக்க செல்பேசியிலேயே முடித்துவிடுகிறேன். டேப் போல பெரிதாகவும் அல்லாமல் செல் போன் போல சிறிதாகவும் அல்லாமல் சட்டைப் பையில் எடுத்துச் செல்ல முடிகிற  அளவிலான ஃபேப்லெட் ( PHAPLET) எனப்படும் இந்த கையடக்க கருவியில் கிட்டத்தட்ட அனைத்து பயன்பாடுகளையும் முடித்து விடலாம்.

கே. நாளிதழ்கள், சஞ்சிகைகளின் மின் பலகைப் பதிப்பை தமிழில் படிக்கிற வாசகர்கள் பலர் அதை அச்சு இதழாகவும் படிக்க முயல்கிறார்களே ஏனிந்த முரண்பாடு?

ப. இணையம் வந்த புதிதிலும் இத்தகைய போக்கு இருந்தது. மின்னஞ்சலை பிரிண்ட் எடுத்து படித்தார்கள். அது போலத்தான் இதுவும் சிறிது காலத்திற்கு இருக்கும்.

கே. தமிழில் உச்சரிப்பு, தூய்மை உள்ளிட்டவற்றில் இந்திய தமிழர்கள் சமரசம் செய்துகொள்ள நேர்ந்த்தற்கும் அயலகத் தமிழர்கள் அதற்கு உண்மையாக  இருப்பதற்கும் என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

ப. அயலகத் தமிழர்களுக்கு தாய்மொழியான தமிழ் அவர்களின் அடையாள  நெருக்கடியோடு தொடர்புடையதாக இருப்பது ஒரு காரணம் என தோன்றுகிறது. இந்திய தமிழர்களுக்கு அத்தகைய நெருக்கடிகள் இல்லை.

கே. பிற மொழித் தாக்கம் உள்ளிட்டவற்றிலிருந்து தமிழ் தன்னைக் காத்துக் கொள்ள இணையமும் உதவுகிறதா?

ப. தமிழ் மொழியைக் காக்கும் வேலியாக தமிழ் இணையம் திகழ்கிறது. கிரந்த எழுத்துக்களைக்கூட சேர்க்காமல் தமிழில் எழுத வேண்டும் என்று சொல்லும் இளைஞர் குழுக்கள் உருவாகும் அளவுக்கு தூய்மையாக பேசுவது ஆபத்தானது என்றாலும் கூட அது என்னை ஈர்க்கிறது.