Home 13வது பொதுத் தேர்தல் சுவா சொய் லெக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – பினாங்கு மாநில 6 ம.சீ.ச...

சுவா சொய் லெக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – பினாங்கு மாநில 6 ம.சீ.ச கிளைகள் போர்க்கொடி

548
0
SHARE
Ad

Chua Soi Lekபினாங்கு, மே 8 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் ம.சீ.ச கட்சி மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தற்குப் பொறுப்பேற்று, கட்சியின் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பினாங்கு மாநில ம.சீ.ச கட்சியின் 6 கிளைகள் வலியுறுத்தியுள்ளன.

அவை பாயான் பாரு, புக்கிட் பெந்தேரா, தஞ்சோங், ஜெலுதோங், பெர்மாத்தாங் பாவ், தாசேக் கெலுகோர் ஆகியவைகளாகும்.

பாயான் பாரு தொகுதியின் ம.சீ.ச செயலாளர் டேவிட் ஈம் கூறுகையில், “ ம.சீ.ச கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் சுவா சொய் லெக் உடனடியாக தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பொதுத்தேர்தலில் சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யாமல் சுயநலமாகச் செயல்பட்டு, சீன சமுதாய மக்களை  ம.சீ.ச வுக்கு எதிராக வாக்களிக்க வைத்து, கட்சிக்கு மிக மோசமான பின்னடைவை தேடித் தந்திருக்கும் கைறைபடிந்த தலைவரான சொய் லெக், தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

அதோடு  ஒட்டுமொத்த சீன சமுதாயத்திடமும், ம.சீ.ச உறுப்பினர்களிடமும் தனது தவறான வழிநடத்தலுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களைப்போன்று மற்ற ம.சீ.ச கிளைகளும் சுவா சொய் லெக் பதவி விலகும் படி குரல் கொடுக்க வேண்டும் என்றும் டேவிட் கேட்டுக்கொண்டுள்ளார்.