Home வணிகம்/தொழில் நுட்பம் ‘யூ டியூப்’ வலைத் தளம் கட்டண அலைவரிசைகளைத் தொடங்கவிருக்கின்றது

‘யூ டியூப்’ வலைத் தளம் கட்டண அலைவரிசைகளைத் தொடங்கவிருக்கின்றது

773
0
SHARE
Ad

you-tubeமே 8 – காணொளி (வீடியோ) மூலம் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கும் யூ டியூப் எனப்படும் காணொளி வலைத் தளம் விரைவில் கட்டணம் செலுத்தும் அலைவரிசைகளைத் தொடங்கவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதுபற்றி கூடிய விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகின்றது.

தற்போது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் காணொளிகளோடு சேர்த்து இந்த கட்டண அலைவரிசை காணொளிகளும் ஒளிபரப்பாகும்.

தற்போது தான் ஒளிபரப்பும் காணொளிகளில் விளம்பரங்களை இடம் பெறச் செய்வதன் மூலம் வருமானம் ஈட்டிவரும் யூ டியூப் இனி கட்டண அலைவரிசைகளைத் தொடக்குவதன் மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

கட்டண அலைவரிசைகளுக்கு ஏறத்தாழ 1.99 அமெரிக்க வெள்ளி கட்டணம் விதிக்கப்படலாம் என “பைனான்சியல் டைம்ஸ்” (The Financial Times) என்ற வர்த்தக சஞ்சிகை கணித்திருக்கின்றது.

2006ஆம் ஆண்டில் ஏறத்தாழ 50 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டிருந்த காலகட்டத்தில் யூ டியூப் வலைத் தளத்தை கூகுள் நிறுவனம் 176 கோடி அமெரிக்க வெள்ளிக்கு விலைக்கு வாங்கியது.

தற்போது இந்த வலைத் தளத்தை ஏறத்தாழ 100 கோடி பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

புகழ் பெற்ற காங்னாம்கொரியப் பாடகர் போன்றவர்களால் அவர்களின் பாடல்கள் யூ டியூப் வழி உலகப் புகழ் பெறுகின்றது என்பது விளம்பரங்களின் மூலம் மிகப் பெரிய வருமானமும் ஈட்டப்படுகின்றது.

இனி யூ டியூப் கட்டண அலைவரிசைகளால் குறிப்பிட்ட சேவைகள் வழங்கும் பிரிவினர் பெரும் பயன் அடைய முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.