Home இந்தியா கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி: பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகும்- ஞானதேசிகன் கருத்து

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி: பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகும்- ஞானதேசிகன் கருத்து

640
0
SHARE
Ad

congresசென்னை, மே 8-  கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறினார்.

கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

கர்நாடகாவில் ஆளும் பா.ஜனதா கட்சி 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரசின் வெற்றி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது:-

இது நாங்கள் எதிர் பார்த்த வெற்றி. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசின் இந்த வெற்றி ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

பா.ஜனதா, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை மீதும் மத்திய மந்திரிகள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி பாராளுமன்றத்தை முடக்கினாலும், மக்கள் இவற்றையெல்லாம் நிராகரித்து விட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவை ஒரு சான்றாக கருதுகிறோம்.

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சீதா ராமையாவுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.