Home உலகம் பில்கேட்ஸின் கோரிக்கையை ஏற்று மேலும் 9 கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கு உதவ உறுதி

பில்கேட்ஸின் கோரிக்கையை ஏற்று மேலும் 9 கோடீஸ்வரர்கள் ஏழைகளுக்கு உதவ உறுதி

537
0
SHARE
Ad

bill-GATES

மியாமி, மே 8-  உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ், ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேசன்’ என்ற அமைப்பை நிறுவி உள்ளார். இதன் மூலம் பல அறிவியல் ஆராய்சிகளுக்கும், ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கும் நிதி உதவியை வழங்கி வருகிறார்.

பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் வாரன் பப்பெட்டும் இணைந்து 2010-ம் ஆண்டு முதல் ‘உறுதிமொழி அளிப்போம்’ என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். உலக பெரும் பணக்காரர்களை கொடை அளிக்க ஊக்குவிக்கும் விதமாக இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த பிரசாரத்தின் விளைவாக இது வரை 105 மிகப்பெரிய பணக்காரர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்துள்ளனர். இவர்கள் தங்களது சொத்தில் ஒரு பகுதியினை ஏழைகளின் முன்னேற்றதிற்காக பயன்படுத்த வழங்குவதாக உறுதி மொழி அளித்துள்ளனர்.

இந்த பிரசாரத்தின் மூலம் மேலும் 9 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களும், தனி நபர்களும் குறைந்த பட்சம் தங்களது சொத்துகளில் பாதியை நன்கொடையாக வழங்க உறுதி மொழி எடுத்துக் கொண்டதாக நேற்று தெரிவித்துள்ளது.

உறுதி மொழி ஏற்றவர்களிடம் இருந்து இந்த அமைப்பு பணத்தை நேரடியாக பெற்றுக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் வாழும் போதும் இறந்த பின்னும் அறப்பணிகளை செய்ய தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள செய்கிறது.

, ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேசன்’ என்ற அமைப்பை நிறுவி உள்ளார். இதன் மூலம் பல அறிவியல் ஆராய்சிகளுக்கும், ஏழைகளுக்கு உதவும் நிறுவனங்களுக்கும் நிதி உதவியை வழங்கி வருகிறார்.

பில் கேட்ஸ், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் வாரன் பப்பெட்டும் இணைந்து 2010-ம் ஆண்டு முதல் ‘உறுதிமொழி அளிப்போம்’ என்ற பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

உலக பெரும் பணக்காரர்களை கொடை அளிக்க ஊக்குவிக்கும் விதமாக இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த பிரசாரத்தின் விளைவாக இது வரை 105 மிகப்பெரிய பணக்காரர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்துள்ளனர்.

இவர்கள் தங்களது சொத்தில் ஒரு பகுதியினை ஏழைகளின் முன்னேற்றதிற்காக பயன்படுத்த வழங்குவதாக உறுதி மொழி அளித்துள்ளனர்.