Home உலகம் போர் அச்சுறுத்தலால் வடகொரியா எதையும் சாதிக்கவில்லை – ஒபாமா

போர் அச்சுறுத்தலால் வடகொரியா எதையும் சாதிக்கவில்லை – ஒபாமா

450
0
SHARE
Ad

022813-politics-obama-budget-cutsவாஷிங்டன், மே 8-  வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையையும், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியையும் எதிர்த்து தென் கொரியா மீது போர் பிரகடனம் செய்தது, தொடர் அச்சுறுத்தல்களையும் விடுத்தது வந்தது.

ஆனால் இதிலிருந்து பின்வாங்கும் விதமாக நேற்று வடகொரியா தாக்கதலுக்கு தயாராக நிலைநிறுத்தி இருந்த ஏவுகணையை அகற்றியது.

இந்நிலையில், தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை அமெரிக்கா சென்றுள்ளார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவை நேற்று சந்தித்தார். பின்னர் இரண்டு பேரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

#TamilSchoolmychoice

அப்போது ஒபாமா கூறியதாவது:-

சமீப காலமாக  வட கொரியா விடுத்து வந்த அச்சுறுத்தல்கள், தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தி விட்டதாகவோ அல்லது இதனால் தனக்கு உலக அளவில் மதிப்பு கிடைத்து விட்டதாகவோ வட கொரியா நம்பலாம். ஆனால், வட கொரியா மீண்டும் தோற்று விட்டதை இந்நாள் காட்டுகிறது. போர் அச்சுறுத்தல்களால் வடகொரியா எதையும் சாதிக்கவில்லை.

வடகொரியா அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம். ஆனால் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த கருத்தில் நாங்கள் முழுமையாக ஒத்துப்போகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.