இவற்றில் பல தொகுதிகளில் கன்னடம் தெலுங்கு மொழிபேசும் மக்களைவிட தமிழர்களே அதிகமாக உள்ளனர்.
காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பெங்களூர் மாவட்ட தலைவர் தினேஷ் குண்டுராவ் 22,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிக்பேட்டையில் ஆர்.வி.தேவராஜ் 13,059 வாக்குகள் வித்தியாசத்திலும் கோவிந்தராஜ் நகரில் பிரியா கிருஷ்ணா 42,460 வாக்குகள் வித்தியாசத்திலும் விஜய நகரில் கிருஷ்ணப்பா 32,642 வாக்குகள் வி¢த்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
சர்வக்ஞ நகரில் ஜார்ஜ் 22,854 வாக்குகள் வித்தியாசத்திலும், சிவாஜி நகரில் ரோஷன் பெய்க் 20,855 வாக்குகள் வித்தியாசத்திலும், சாந்தி நகரில் ஹாரீஷ் 20,187 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.