Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நகர்களின் மும்பாய்க்கு 6வது இடம்

உலகின் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நகர்களின் மும்பாய்க்கு 6வது இடம்

542
0
SHARE
Ad

mumbaiமே 10 – பெரும் கோடீஸ்வரர்களைக்கொண்ட உலகின் 10 மாநகர்களில் ஒன்றாக இந்தியாவின் மும்பாய் நகரம் ஓர் ஆய்வின் வழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

1000 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை உடைய கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில்  6வது நகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மும்பாய் பாரிஸ், ஷங்காய் நகர்களை விட அதிகமான பணக்காரர்களைக் கொண்ட நகராகத் திகழ்கின்றது.

26 கோடீஸ்வரர்களைக் கொண்ட மும்பாய் இந்தியாவின் தலையாய வர்த்தக நகராகும்.

அமெரிக்காவின் நியுயார்க் நகரம் 70 கோடீஸ்வரர்களைக் கொண்டு உலகிலேயே அதிக பணக்காரர்கள் வாழும் நகராக முதல் நிலை வகிக்கின்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 64 கோடீஸ்வரர்களைக் கொண்ட நகராக ரஷியாவின் மாஸ்கோவும், 54 கோடீஸ்வரர்களைக் கொண்ட நகராக லண்டனும், 40 பேரைக் கொண்ட நகராக ஹாங்காங்கும் திகழ்கின்றது.

29 கோடீஸ்வரர்களைக் கொண்ட நகராக சீனாவின் தலைநகர் பெய்ஜிங் திகழ்கின்றது.

mumbai-beachமும்பாயை அடுத்து வரும் நகர்களில் ஏழாவது இடத்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரும், எட்டாவது இடத்தை சீனாவின் ஷங்காய் நகரும், ஒன்பதாவது இடத்தை பாரிஸ் நகரும் பத்தாவது இடத்தை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரும் பிடித்துள்ளன.

அதே போன்று 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சொத்துக்களை உடைய பணக்காரர்கள் வசிக்கும் நகரங்களில் தோக்கியோ முன்னிலை வகிக்கின்றது. இங்கே 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை உடைய பணக்காரர்கள் 460,000 பேர் வாழ்வதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்த வரிசையில் 10 லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்துக்களை உடைய பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 11வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டுக்குள், தற்போதைய 11ஆம் இடத்திலிருந்து 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் ஏழை நாடு என்றும் வறுமைப் பிடியிலுள்ள நாடு என்றும் கணக்கெடுப்பில் இடம் பிடித்த இந்தியா இப்போது அதிகமான பணக்காரர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உயர்ந்திருக்கின்றது.