மே 13 – இன்று, அட்சய திரிதியை. இந்நாளில், தங்கம் வாங்குவது சிறப்பானதாகவும் மேலும் குடும்பத்திற்கு மேலும் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் எனவும் கருதப்படுகிறது.
இதனால், இன்று நாடெங்கிலும் உள்ள இந்திய நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது.
ஒரு சில கடைகளில், முன்கூட்டியே முன்பதிவுகள் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் நகைகளைத் தேர்வு செய்துவிடுகின்றனர்.
அதன் பின்னர் நல்ல நாளான இன்று கடைகளுக்கு சென்று தாங்கள் ஏற்கனவே தேர்வு செய்த நகைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
தங்கம் விலை குறைந்ததால் அதிகமாக விற்பனை
கடந்தாண்டு, தங்கத்தின்விலை அதிகம் இருந்ததால், நகைக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்துகாணப்பட்டது.
ஆனால் இன்றைய நிலையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் மேலும் அதிகமாக தங்க நகை விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால், நாட்டின் முக்கிய நகரங்களில் குறிப்பாக தலைநகரில் உள்ள இந்திய நகைக் கடைகள் பலத்த முன்னேற்பாடுகளைச் செய்துள்ளன.
இந்தியாவிலும் அமோக தங்க விற்பனை
தங்க நகைகளைக் கொள்முதல் செய்வதில் உலகில் முதலிடம் வகிக்கும் இந்தியாவிலும் இன்றைக்கு அமோகமான விற்பனைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று, அட்சய திரிதியை நாளில், இந்தியாவில் மட்டும் 8,000 கிலோ மதிப்புடைய தங்க நகைகள் கூடுதலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகஅகில இந்திய ஆபரண, தங்க நகை வர்த்தக கூட்டமைப்பு தலைவர், ஹரேஷ் சோனி கூறியிருக்கின்றார்.
“இந்த தடவை, தங்கஆபரணங்கள், தங்க காசுகள் விற்பனை, 25 சதவீதம் அதிகரிக்கும். தமிழகம் உட்படதென் மாநிலங்களில், வழக்கத்தை விட, அதிக அளவில் தங்கம் விற்பனை இருக்கும்.கடந்த ஆண்டு, அட்சய திரிதியை சமயத்தில், தங்க ஆபரணங்கள் மற்றும் காசுகள், 17 ஆயிரம் கிலோ விற்பனையானது. இந்த ஆண்டு, அதன் அளவு கூடுதலாக 8,000 கிலோஅதிகரித்து, 25 ஆயிரம் கிலோ என்ற அளவை, நாடு முழுவதும் எட்டும்” என ஹரேஷ் சோனி மேலும் கூறியிருக்கின்றார்,