Home நாடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக காலிட் இப்ராகிம் மீண்டும் பதவி ஏற்றார்

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக காலிட் இப்ராகிம் மீண்டும் பதவி ஏற்றார்

516
0
SHARE
Ad

kalidஷா ஆலம், மே 14 –  சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக டான் ஸ்ரீ காலிட் இப்ராகிம் இன்று காலை கிள்ளானில் உள்ள இஸ்தானா ஆலம் ஷாவில், சிலாங்கூர் சுல்தான் ஷாராபுதீன் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

மந்திரி பெசாராக பதவி ஏற்பது காலிட் இப்ராகிமுக்கு இது இரண்டாவது முறையாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பின்னர், அம்மாநிலத்தின் 13 ஆவது மந்திரி பெசாராக அப்துல் காலிட் இப்ராகிம் முதல் முறையாகப் பதவி ஏற்றார்.

#TamilSchoolmychoice

தற்போது நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில், மக்கள் கூட்டணி மொத்தமுள்ள 56 சட்டமன்ற தொகுதிகளில் 44 ஐ வென்று மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக்கொண்டதால், மீண்டும் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக இரண்டாவது முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.