Home நாடு ஜோகூர் மாநில மந்திரி பெசாராக காலிட் நோர்டின் இன்று பதவி ஏற்பு

ஜோகூர் மாநில மந்திரி பெசாராக காலிட் நோர்டின் இன்று பதவி ஏற்பு

618
0
SHARE
Ad

Untitled-1

ஜோகூர் பாரு, மே 14 – ஜோகூர் மாநில மந்திரி பெசாராக பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இன்று பதவி ஏற்கிறார். இவர் ஜோகூர் மாநிலத்தின் 15 ஆவது மந்திரி பெசார் ஆவார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் ஜோகூர் மாநில மந்திரி பெசாராக இருந்து வந்த டத்தோ அப்துல் கனி ஒத்மானுக்குப் பதிலாக காலிட் நோர்டின் பதவி ஏற்கிறார். 13 ஆவது பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிராக களமிறங்கிய கனி ஒத்மான் 14,762 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

#TamilSchoolmychoice

ஜோகூர் மாநில சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் முன்னிலையில் இன்று காலை 9 மணியளவில் புக்கிட் திம்பலானில் நடைபெற்ற இப்பதவி ஏற்பு விழாவில், காலிட் நோர்டினுடன் சேர்த்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் 9 பேரும் பதவி ஏற்றனர்.

குறிப்பாக பொதுத்தேர்தலில் கஹாங் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.இ.கா பொருளாளர் ஆர். வித்யானந்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.