இதற்காக கட்சியின் தேசிய தலைவர் மற்றும் கட்சியின் உச்ச மன்றம் ஆகிய இரண்டு மையங்களின் முடிவுகளுக்கு ஏற்ப அம்னோ தனது பணியை தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
“ஒவ்வொரு தலைமைத்துவம் குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். நாம் அவர்களை ஏற்றுக் கொள்கிறோமா, அவர்களின் கருத்தை ஒப்புக் கொள்கிறோமா என்பது முக்கியமில்லை. அவர்களின் முடிவை நாம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் கட்சிக் கட்டுப்பாடு நிலைநிறுத்தப்படும். மேற்கொண்டு கட்சியும் மேம்பாடு அடைய முடியும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
காலிட் நோர்டின் ஜோகூர் மாநில முன்னாள் மந்திரி பெசாரும் முன்னாள் அமைச்சருமாவார்.