Home கலை உலகம் 2012-ல் அழகான நடிகைகள்- தமன்னாவுக்கு முதல் இடம்

2012-ல் அழகான நடிகைகள்- தமன்னாவுக்கு முதல் இடம்

686
0
SHARE
Ad

tamana

மே 15- கடந்த 2012 ஆண்டு  ரசிகர்களை கவர்ந்த அழகான நடிகைகள் பற்றிய கருத்து கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இவர் தமிழில் கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, சிறுத்தை, வேங்கை என பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தமன்னாவின் வசீகர பார்வையும் மெல்லிய இடையும் ரசிகர்களை கவர்ந்த அம்சங்களாக கருதப்படுகிறது. பல முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ரசிகர்கள் விரும்பும் அழகான நடிகைகள் பட்டியலில் நயன்தாராவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. இவர் காதல் சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் இன்னும் முன்னணி நடிகையாக உள்ளார். அஜீத் ஜோடியாக வலை, ஆர்யா ஜோடியாக ராஜாராணி படங்களில் நடித்து வருகிறார்.

மூன்றாவது இடம் நடிகை அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளது. இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு வந்தார். பெரிய ஹீரோக்கள் ஜோடியாக தொடர்ந்து நடித்துவருகிறார். நடிகை ஸ்ரேயா 4-வது இடத்தையும் டாப்ஸி 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இலியானாவுக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது. அமலாபால் 7-வது இடத்தையும் ஹன்சிகா 8-வது இடத்தையும் சமந்தா 9-வது இடத்தையும் காஜல் அகர்வால் 10-வது இடத்தையும் பெற்றுள்ளனர். ஸ்ருதிஹாசன் 11-வது இடத்தில் உள்ளார்.