Home அரசியல் சுவா சொய் லெக்கின் முடிவு: வரலாற்றில் முதல் முறையாக மசீச இல்லாத புதிய அமைச்சரவை

சுவா சொய் லெக்கின் முடிவு: வரலாற்றில் முதல் முறையாக மசீச இல்லாத புதிய அமைச்சரவை

447
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், மே 16 –  மத்திய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் வரலாற்றில் முதல் முறையாக மசீச கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்கு இடம் வழங்கப்படவில்லை.

நாட்டின் அமைச்சரவை வரலாற்றில் மசீசாவின் பங்களிப்பு இன்றி அமைச்சரவை அமைத்திருப்பது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.

நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் மசீச மோசமான தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரான சுவா சொய் லெக் மசீச அமைச்சரவைப் பதவிகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனால் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மசீசவுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், புலாவ் செபாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தி சியு கியோங் ஜோகூர் ஆட்சிக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதால், அமைச்சரவையிலும் மசீச இடம் பெறும் என்று பரவலாக கருத்து நிலவியது.

எனினும் அமைச்சரவை வேண்டாமென சுவா சொய் லெக் உறுதியாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய அமைச்சரவைப் பட்டியல் அமைந்துள்ளது.