Home உலகம் பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் ஓய்வு

645
0
SHARE
Ad

bechamலண்டன், மே 17- இங்கிலாந்து கால்பந்தாட்டக் குழுவின் முன்னாள் கேப்டனாக இருந்த டேவிட் பெக்காம் ( வயது 38) கால்பந்து விளையாட்டிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் குழுவினரை, லீக் 1 போட்டியில் வென்று, நான்கு நாடுகளில் லீக் போட்டியை வென்ற முதல் இங்கிலாந்து நாட்டு வீரர் என்ற பெருமையுடன், தன்னுடைய இந்த முடிவை தெரிவித்துள்ளார்.

மேலும், 1993 ஆம் ஆண்டு, இவரை கால்பந்தாட்டப் போட்டியில் அறிமுகம் செய்து வைத்த மான்செஸ்டர் யுனைடட் குழுவின் அறிவுரையாளர் அலெக்ஸ் பெர்குசன், சமீபத்தில் தன்னுடைய பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து பெக்காமும் ஓய்வு பெறுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ரியல் மாட்ரிட், லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்ஸி, ஏசி மிலன் மற்றும் பாரிஸ் செயின்ட் – ஜெர்மைன் குழுக்களில் விளையாடியுள்ள இவர், முன் எப்போதும் கண்டிராத அளவிற்கு தன்னுடைய ஆட்டத்திறமையால் இங்கிலாந்து குழுவினருக்கு 115 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

பிஎஸ்ஜி அணி தொடர்ந்து விளையாட அழைத்தமைக்கு நன்றி கூறிய பெக்காம், உயர்ந்த நிலையில் இருக்கும்போதே ஓய்வு பெறுவதைத் தான் விரும்புவதாகக் கூறினார்.

ஆறு லீக் போட்டிகள், இரண்டு எப்ஏ கோப்பைகள், 1999ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பை, நான்கு ஸ்பெயின் நாட்டு லீக் போட்டிகள் போன்றவை இவர் பெற்றுத் தந்த வெற்றிகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆறு முறை இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியதை பெருமையுடன் குறிப்பிட்ட பெக்காம், மூன்று உலகக் கோப்பைகளில் பங்கு பெற்ற வீரர் என்ற பெருமையையும் கொண்டவர் ஆவார்.