Home World Cup Soccer 2014 இறுதி ஆட்டத்தைக் கண்டு இரசித்த பெலி – பெக்காம்

இறுதி ஆட்டத்தைக் கண்டு இரசித்த பெலி – பெக்காம்

854
0
SHARE
Ad

 Brazilian soccer legend Pele pictured in the stands before the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014. ரியோ டி ஜெனிரோ, ஜூலை 15 – எத்தனையோ காற்பந்து விளையாட்டாளர்கள் கால ஓட்டத்தில் உருவாகினாலும், தங்களின் திறன்மிக்க ஆற்றலால் புகழ் பெற்றாலும், பிரேசிலின் முன்னாள் ஆட்டக்காரர் பெலிதான் காற்பந்து உலகின் நிரந்தர கதாநாயகன்.

குத்துச் சண்டை விளையாட்டில் எப்படி முகம்மது அலிக்கு நிரந்தர இடமோ அதேபோன்று பெலியும் தனது கடந்த கால சாதனைகளால் காற்பந்து உலகில் அசைக்க முடியாத சிம்மாசனம் போட்டு இரசிகர்களின் மனங்களில் அமர்ந்து விட்டார்.

உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தைக் காண பெலியும் வந்திருந்தார். அப்போது அரங்கிலிருந்த இரசிகர்களுக்கு பெலி கையசைத்து வாழ்த்து சொன்ன  காட்சிதான் இது.

#TamilSchoolmychoice

போட்டியைக் காண வந்திருந்த மற்றொரு இங்கிலாந்து காற்பந்து பிரபலம் டேவிட் பெக்காமும் அர்ஜெண்டினா-இறுதி ஆட்டத்தைக் காண வந்திருந்தார். பெக்காம் இங்கிலாந்து குழுவின் தலைமை விளையாட்டாளராக ஏற்கனவே உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருப்பதை இரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

Brazilian soccer legend Pele (L) greets former English soccer player David Beckham (R) before the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

அரங்கில் காற்பந்து உலகின் முன்னாள் பிரபலங்கள் பெலியும்-டேவிட் பெக்காமும் சந்தித்து அளவளாவிக் கொண்ட காட்சி.

படங்கள் :