Home கலை உலகம் ரசிகர்கள் அன்பில் மகிழ்கிறேன் – தமன்னா

ரசிகர்கள் அன்பில் மகிழ்கிறேன் – தமன்னா

513
0
SHARE
Ad

tamanaமே 17- 2012-ல் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் தமன்னாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.

தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தேர்வு செய்துள்ளனர். குடும்ப பாங்காகவும், ஜாலியான கதாபாத்திரத்திலும்  நடித்து வருகிறேன்.

#TamilSchoolmychoice

கல்லூரி, அயன், பையா போன்ற படங்களில் அத்தகைய கதாபாத்திரத்தில்  நடித்து உள்ளேன். ஆண்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் எனக்கு நிறைய இருக்கிறார்கள்.

நடிகர்களில் எனக்கு ஹிருத்திக் ரோஷனை பிடிக்கும். நான் அவருடைய ரசிகை. சூர்யா, விஜய், ஜெயம் ரவி போன்றோர் பிரமாதமாக நடிக்கின்றனர்.

அவர்களையும் எனக்கு பிடிக்கும். ரசிகர்கள் எனது ஆள் உயர உருவ படங்களுக்கு பூஜை, பால்அபிஷேகம் செய்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இந்த மரியாதைகள் நிரந்தரம் அல்ல என்று எனக்கு தெரியும். இது வரும் போகும்.

தமிழில் அஜீத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறேன். இந்த வருடம் அப்படம் ரிலீசாகும். பட உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இன்று நான் இருக்கிறேன். நாளை வேறொருத்தர் வருவார். நம்பர் ஒன் இடம் என்பது நிரந்தரமானது அல்ல. இவ்வாறு தமன்னா கூறினார்.