Home வணிகம்/தொழில் நுட்பம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை எட்டிஹாட் நிறுவனம் வாங்குகிறது

ஜெட் ஏர்வேஸின் பங்குகளை எட்டிஹாட் நிறுவனம் வாங்குகிறது

1050
0
SHARE
Ad

Jet Airways A320-200புதுடில்லி, மே 17 – இந்திய விமான நிறுவனங்களின் உரிமை குறித்த கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தளர்த்தப்பட்டதை அடுத்து இந்தியன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 379 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 24 சதவீத பங்குகளை எட்டிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வாங்கவுள்ளது.

ஒருமாத பேச்சுவார்த்தைக்கு பிறகு போடப்பட்ட முதலாவது வெளிநாட்டு ஒப்பந்தம் இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நஷ்டத்தில் இயங்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பிலான வட்டிதொகை சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எட்டிஹாட் நிறுவனம் ஹீத்ரோ விமான நிலையத்தில் 220 மில்லியன் டாலர்களை ஃப்ரீக்வன்ட் ஃப்ளையர் திட்டத்திலும், சுமார் 150 கோடி டாலர்களை ஜெட் நிறுவனத்திற்கு உயர் செலவு கடனாகவும் கொடுக்கவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த ஒப்பந்தப்படி ஜெட் நிறுவனம் சந்திக்கும் முக்கிய சவால்களில் ஒன்று ” நடைமுறை பங்கு விலை அதன் அடிப்படை மதிப்பை பிரதிபலிக்காது” என்று திரு. ராஜ் பாலகிருஷ்ணன், அமெரிக்க மெர்ரில் லிஞ்ச் என்ற வங்கி நிர்வாக இயக்குநர் & முதலீட்டு வங்கி கூட்டுறவு தலைவர் கூறுகிறார்.

ஜெட்-எட்டிஹாட் ஒப்பந்தம் உறுதியாகும் முன்பே பல்வேறு விமர்சனங்களை சந்திக்கவுள்ளது. இந்த ஒப்பந்தம் மற்ற உள்நாட்டு விமான நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்று ஒருசாராரும், எட்டிஹாட்டின் இந்த உடன்பாடு ஏராளமான புதியவழிகளையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர்.

ஜெட்-எட்டிஹாட் ஒப்பந்தம் இந்திய விமான சேவையை முன்னோக்கி நகர்த்துமா? அல்லது பின்னடைவாக இருக்குமா என்று வரும்காலங்களில் வெட்டவெளிச்சமாகும்.