Home வணிகம்/தொழில் நுட்பம் நோக்கியா ஆஷா 501 கைப்பேசி இந்தியாவில் அறிமுகம்

நோக்கியா ஆஷா 501 கைப்பேசி இந்தியாவில் அறிமுகம்

571
0
SHARE
Ad

Nokia-announced-Asha-501-a-smart-device-to-take-on-the-low-cost-Android-phones-in-developing-markets-like-Indiaபுதுடில்லி, மே 17 – புதுடெல்லியில் கடந்த வாரம் நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா ஆஷா 501 கைப்பேசியை அறிமுகப்படுத்தியது.

இதன் அறிமுக விழாவில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கலந்துக்கொண்டு ஆஷா 501 கைப்பேசியை அறிமுகப்படுத்தினார்.

இதில் பேசிய அவர், ஆஷா 501 வாடிக்கையாளர்களுக்கு இணைய பயன்பாட்டிற்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் ஒப்பந்தம் வைத்திருக்கிறது என்று கூறினார். மேலும் ஏர்டெல்லில் இலவசமாக பேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் நோக்கியா நிர்வாக குழு துணை தலைவர் திரு. டிமோ டொய்காணேன் கூறும்பொழுது ” இது உண்மையில் புதிய இயங்குதளம் சுற்றிய ஒரு ஆரோக்கியமான சூழல் உருவாக்கும் எங்கள் முயற்சி” என்றார்.

நோக்கியா ஆஷா 501ன் சிறப்பம்சங்கள்: 

ஆஷா 501 கைபேசியில் முன் கூட்டியே நிறுவப்பட்ட பயன்பாடுகளான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவையும் உள்ளன.

மேலும், ஆஷா 501 வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் ஒப்பந்தம் வைத்திருப்பதால் படங்களை நேரடியாக பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளலாம். இத்துடன் நோக்கியா எக்ஸ்பிரஸ் உலவியும் உள்ளது.

இந்த கைப்பேசி வரும் ஜூன் மாதத்திலிருந்து ரூ. 5,347 என்ற விலையில் களமிறங்க இருக்கிறது.

மும்முனை திறவுகோல் கொண்ட இயக்க அமைப்பு இருப்பதாலும், பல சிறந்த பயன்பாடுகள் வைத்திருப்பதலும்  வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இந்த நோக்கியா ஆஷா 501 இருக்கும் என்றும் நோக்கியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் நம்பிக்கைத் தெரிவித்தார்.