Home நாடு “வேதமூர்த்தியே தகுதியானவர் என்று பிரதமர் தேர்ந்தெடுத்திருக்கிறார்” – ஹிண்ட்ராப் கணேசன் கருத்து

“வேதமூர்த்தியே தகுதியானவர் என்று பிரதமர் தேர்ந்தெடுத்திருக்கிறார்” – ஹிண்ட்ராப் கணேசன் கருத்து

501
0
SHARE
Ad

n-ganesanபெட்டாலிங் ஜெயா, மே 18 – புதிய அமைச்சரவையில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி துணையமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக மஇகா இளைஞர் தலைவர் டி.மோகன் மற்றும் ஹிண்ட்ராப்பின் பெயரளவுத் தலைவர் உதயக்குமார் போன்றோர்அவரை கண்டிப்பது அர்த்தமற்றது என்று ஹிண்ட்ராப் ஆலோசகர் என்.கணேசன் (படம்) கூறியுள்ளார்.

மேலும்  “அமைச்சரவையில் தகுதியானவர்களுக்குப் பதவி வழங்குவது பிரதமரின் தனிப்பட்ட உரிமை. அவ்வாறு பிரதமர் நஜிப் தனது அமைச்சரவையில் வேதமூர்த்தியை நியமனம் செய்துள்ளார். அதை வேதமூர்த்தியும் இந்தியர்களின் நலனுக்காக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால் பிரதமர் எடுத்த அந்த முடிவை வேதமூர்த்தி தான் எடுத்தார் என்பது போல் அவரைக் குறி வைத்து கண்டனங்களை விடுப்பது அர்த்தமற்ற செயல்” என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது புதிய அமைச்சரவைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில் பிரதமர் துறையில் கீழ் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கு துணையமைச்சர் பதவி வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி.மோகன் உட்பட பல்வேறு தரப்புகள் அவருக்கு எதிராக தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். வேதமூர்த்தியின் சகோதரர் உதயமூர்த்தி கூட அவரை  ‘புதிய மண்டோர் என்றும், புதிய சாமிவேலு’ என்றும் கூறியிருந்தார்.

இது போன்ற கருத்துக்களைப் பற்றி குறிப்பிட்ட கணேசன்,  “இந்திய சமூதாயத்தில் தேவையான வளர்ச்சிகளை மேற்கொள்ள, வேறு தகுந்த இயக்கமோ அல்லது தனி மனிதர்களோ இல்லாததால் ஹிண்ட்ராப் வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே மோகனும், உதயகுமாரும் வேதமூர்த்தியின் நியமனம் குறித்து கருத்துத் தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கணேசன் கூறியுள்ளார்.