Home நாடு உதயாவின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஹிண்ட்ராப் கோரிக்கை

உதயாவின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஹிண்ட்ராப் கோரிக்கை

586
0
SHARE
Ad

n.ganesanகோலாலம்பூர், ஜூன் 11 – தேச நிந்தனை குற்றச்சாட்டில் 30 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஹிண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமாரின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தை ஹிண்ட்ராப் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஹிண்ட்ராப் ஆலோசகர் என்.கணேசன் கூறுகையில்,“உதயகுமாருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த ஒரு தனிநபரின் கோரிக்கையும் இன்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காரணம் உதயகுமார் நீதித்துறையின் மீதிருந்த நம்பிக்கையை இழந்து தன்னை இவ்வழக்கில் இருந்து தற்காத்துக் கொள்ள மறுத்து வருகிறார். இவ்வழக்கு தொடர்பாக அவர் ஏற்கனவே 514 நாட்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் மீண்டும் அவருக்கு தண்டனை வழங்கியிருப்பது இரண்டு முறை தண்டனை பெற்றதற்குச் சமமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சட்ட ஆலோகராக இருந்த உதயகுமார், பிரிட்டிஷ் அரசாங்கத்தை விமர்சித்து அக்கடிதத்தை எழுதும் சமயம், இரண்டாவது முறையாக பாடாங் ஜெயாவிலுள்ள இந்து ஆலயம் சிலாங்கூர் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டிருந்து.

இதனால் தேசிய முன்னணியின் தலைமையிலான சிலாங்கூர் அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். எனவே அந்த மக்களுக்காகத் தான் உதயகுமார் அவ்வாறு கடுமையான வார்த்தைகளால் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவைகள் அனைத்தும் இந்திய மக்களின் உண்மையான உணர்வுகள்” என்றும் கணேசன் தெரிவித்துள்ளார்.

இரட்டை தண்டனை, இரட்டைப் போக்கான சட்டங்கள்

இந்து மதத்தினரை இழிவுபடுத்திய பெர்க்காசா துணைத்தலைவர் சுல்கிப்ளி நோர்டினுக்கு இதுவரை எந்த தண்டனையும் வழங்காமல், உதயகுமாருக்கு மட்டும் இரட்டை தண்டனை வழங்கியிருக்கும் நீதித்துறையின் போக்கை கணேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஒரு குறிப்பிட்ட தனிநபர்களுக்கு மட்டும் தண்டனை வழங்குவது போன்ற இரட்டைப் போக்கான நிலையை நீதிமன்றம் கைவிடவேண்டும்” என்று கணேசன் தெரிவித்துள்ளார்.