Home உலகம் பில் கிளின்டனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தந்தை விருது- அமெரிக்கா

பில் கிளின்டனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தந்தை விருது- அமெரிக்கா

573
0
SHARE
Ad

clinton-1நியூயார்க், ஜூன் 11- அமெரிக்காவில் உள்ள ‘லாப நோக்கமற்ற தேசிய தந்தையர் தின குழு‘ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தந்தைக்கான விருதை வழங்கி வருகிறது.

இந்த குழு ‘பாதர் ஆப் த இயர்‘ என்ற பெயரில் 1941-ம் ஆண்டு முதல் விருதினை வழங்கி வருகிறது.

உலக தந்தையர் தினம் வரும் 16-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த வருடத்திற்கான விருது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு வழங்கப்பட இருப்பதாக இந்த குழு தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு அவர் மகள் செலஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கிளின்டன் அதிபராக இருந்த போது, அவருடைய 12 வயதான மகள் செலஸ்-சை வெளியுலக பார்வையிலிருந்து பாதுகாத்து வந்தார். அவர் தனது பணியையும் தந்தை பொறுப்பையும் சரிவர நிறைவேற்றியதை பாராட்டும் விதமாக இந்த விருதை அவருக்கு அளிப்பதாக அக்குழு கூறியுள்ளது.

இந்த விருது ஜான் கென்னடி, ரோனால்ட் ரீகன், கோலின் பாவெல் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.