Home இந்தியா எல்லை அத்துமீறல் குறித்து சீனாப்பிரதமரிடம் மன்மோகன் சிங் கவலை

எல்லை அத்துமீறல் குறித்து சீனாப்பிரதமரிடம் மன்மோகன் சிங் கவலை

442
0
SHARE
Ad

manmohan-singhபுதுடெல்லி, மே 20- இந்திய லடாக் எல்லையில் உள்ள தெப்சாங் பகுதியில் சமீபத்தில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் 19 கிலோ தூரத்திற்கு ஆக்கிரமித்தது.

பிறகு நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

இந்நிலையில், நேற்று இந்தியா வந்த சீனப்பிரதமர் லீ கெகியாங் தலைமையிலான குழு, பிரதமர் மன்மோகன் சிங்கை இரவு சந்தித்தனர்.

#TamilSchoolmychoice

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது சர்ச்சைக்குரிய எல்லைப்பிரச்சினை தகராறு, இரு நாடுகளில் வழியாக பாயும் ஆற்று நீரை பகிர்ந்துகொள்வதில் பிரச்சினை மற்றும் வர்த்தக பற்றாக்குறை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி பேசியதாவது:-

சமீபத்தில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்தபோது இந்தியா மிகக் கடுமையான கவலை அடைந்தது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் அமைதி மற்றும் சமாதானத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

திபெத்தில் உற்பத்தியாகி வரும் பிரம்மபுத்திரா நதி நீரை பகிர்ந்து கொள்வதில் பாரபட்சத்துடன் மேலும் அங்கு 3 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இது கவலை அளிக்கிறது. பிரம்மபுத்திரா நதி நீரை பகிர்ந்துகொள்வது குறித்து நீர் கமிட்டி அல்லது இரு நாட்டு அதிகரிகளின் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த சந்திப்பில் பிரச்சினைகள் குறித்து கவலைகளை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். மீண்டும் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் அதுகுறித்து விரிவாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.