Home இந்தியா சீன பிரதமருக்கு எதிர்ப்பு: டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம்

சீன பிரதமருக்கு எதிர்ப்பு: டெல்லியில் திபெத்தியர்கள் போராட்டம்

582
0
SHARE
Ad

liபுதுடெல்லி, மே 21- சீன பிரதமர் லீ கெகியாங் 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார்.

அவரது இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று பல இடங்களில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால் டெல்லியில் சீன பிரதமர் தங்கியுள்ள விடுதி, சீன தூதரகம், சீன பிரதிநிதிகள் தங்கியுள்ள விடுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பஞ்சஷீல் மார்க் முதல் தவுலா கான் வரை சர்தார் படேல் மார்க்சாலை மூடப்பட்டது.

4 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் பிரதமர் வீடு அருகேயுள்ள ரேஸ்கோஸ் ரெயில் நிலையம் ஆகியவை சில மணி நேரங்களில் மூடப்பட்டிருந்தன.