அவருடன் மனைவி சுரேகா, மகன் நடிகர் ராம்சரண் தேஜா, மருமகள் உபாசனா ஆகியோரும் சென்று இருந்தனர்.
கேன்ஸ் பட விழாவில் சிரஞ்சீவி பேசியதாவது:-
இந்திய தட்ப வெப்பநிலை அதற்கு உகந்ததாக உள்ளது. சில நாடுகளில் பனியும், சில நாடுகளில் மழையும் இருக்கும். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாது. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. எப்போது வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்தலாம். படப்பிடிப்புக்கு ஏற்ற இடங்களும் உள்ளன.
ஆஸ்கார் விருதை வென்ற ‘லைப் ஆப் பை’ படம் இந்தியாவில்தான் எடுக்கப்பட்டது. எனவே வெளிநாட்டவர்கள் இந்தியாவில் படப்பிடிப்புகள் நடத்த முன்வர வேண்டும். கேன்ஸ் படவிழாவில் இந்திய படங்கள் அதிகம் பங்கேற்பது வளர்ச்சியை கூட்டுகிறது. இவ்வாறு சிரஞ்சீவி பேசினார்.
கேன்ஸ் படவிழாவில் இந்திய சினிமாவின் 100 ஆண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சிரஞ்சீவி பங்கேற்றார். கேன்ஸ் படவிழாவுக்கு சென்ற ஐஸ்வர்யாராய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வித்யாபாலன் நடுவராக பங்கேற்றார். அவர் முழுக்க விதவிதமான புடவைகளில் வந்து கூட்டத்தினரை கவர்ந்தார். மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.