Home அரசியல் மசீச உட்கட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் – சுவா சொய் லெக் அறிவிப்பு

மசீச உட்கட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் – சுவா சொய் லெக் அறிவிப்பு

540
0
SHARE
Ad

Chua Soi Lekகோலாலம்பூர், மே 21 – மசீசவின் உட்கட்சித் தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார்.

மசீச கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் முடிந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சொய் லெக், “மசீச கட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் போன்ற முக்கிய பதவிகளுக்கான தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியும், கிளைவாரியான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 15 ஆம் தேதியும் நடக்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.