Home நாடு தேர்தல் முடிவை ஏற்க முடியாத அன்வார் ஒரு மனநோயாளி – சாமிவேலு கருத்து

தேர்தல் முடிவை ஏற்க முடியாத அன்வார் ஒரு மனநோயாளி – சாமிவேலு கருத்து

698
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர், மே 22 – பொதுத்தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத வருத்தத்தில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு மனநோயாளியைப் போல் நடந்து கொள்வதாக முன்னாள் ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காகவே கறுப்பு 505 பேரணி போன்றவைகளை நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோலாம்பூரில் நேற்று மாஜூ கல்வி மேம்பாட்டுக்கழகத்தின் சார்பாக யு.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கு நூல் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சாமிவேலு இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்கள் கூட்டணி தான் இம்முறை ஆட்சியைப் பிடிக்கும், புத்ரஜெயாவைக் கைப்பற்றுவோம், நான் தான் பிரதமர் என்று மக்களிடம் தேர்தலுக்கு முன் அன்வார் கூறிவந்தார். ஆனால் அதற்கு மாறாக தேர்தலில் தோல்வி கண்டார். இதனால் பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒரு மனநோயாளி போல் கூறி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டத்தோஸ்ரீ அன்வாரின் அவதூறுகளையும், கட்டுக்கதைகளையும் கண்டு பிரதமர் நஜிப் அஞ்ச வேண்டாம் என்றும், நாட்டை சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல அவருக்கு எல்லா தகுதிகளும் உண்டு என்றும் சாமிவேலு கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice