Home இந்தியா ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் – கருத்துக்கணிப்பில் தகவல்

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் – கருத்துக்கணிப்பில் தகவல்

578
0
SHARE
Ad

manmohanபுதுடெல்லி, மே 22-  ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர், மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக 67 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு அரசு ஆட்சியை விட மன்மோகன் சிங் அரசு ஆட்சியே பரவாஇல்லை என்று 37 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஊழல் மலிந்து விட்டதாக 71 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எல்லா ஆட்சியிலும் ஊழல் இருப்பதாக 20 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட மெகா ஊழல்களை பிரதமர் அலுவலகம் மூடி மறைப்பதாக 64 சதவீதம் பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர். நிலக்கரி சுரங்க முறைகேட்டில் மன்மோகன் சிங்கிற்கு நேரடித் தொடர்பு உள்ளது என 65 சதவீதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன்மோகன் சிங் ஊழல் கறை படியாதவர் என்று 28 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அடுத்த பிரதமராக வர 38 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.