Home நாடு நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய சமுதாயத்தின் பங்களிப்பு – ஒற்றுமை பொங்கல் விழாவில் பிரதமர் நஜிப் பெருமிதம்

நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்திய சமுதாயத்தின் பங்களிப்பு – ஒற்றுமை பொங்கல் விழாவில் பிரதமர் நஜிப் பெருமிதம்

1037
0
SHARE
Ad

Slider-Najib---1கோலாலம்பூர், பிப்ரவரி 2 – சரித்திர பிரசித்தி பெற்ற டத்தாரான் மெர்டேக்காவில் ஒற்றுமை பொங்கல் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதால் இது நாட்டின் நிர்மாணிப்பிலும், முன்னேற்றத்திலும் இந்தியர்களின் பங்களிப்பை உணர்த்துவதாகவும், எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது என ஒற்றுமைப் பொங்கல் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நாட்டின் ரயில் பாதை நிர்மாணிப்புக்களுக்கு முதுகெலும்பாக திகழ்ந்தவர்களும், மலேசிய பொதுப் பணித் துறை அமைச்சின் கட்டிட அமைப்புக்களுக்கும், நீர்வள இணைப்புக்களுக்கும் பாடுபட்டவர்களும் இந்தியர்கள்தான் என்றும் நஜிப் நன்றியுடன் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயம் தொடர்ந்து தன்மீது நம்பிக்கை வைத்தால் தேசிய முன்னணிக்கு ஆதரவளித்தால் மேலும் பல சலுகைகளையும் பலன்களையும் இந்திய சமுதாயத்திற்கு தம்மால் வழங்க முடியும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தான் அறிவிக்கும் சலுகைகள் முற்றுப் புள்ளியல்ல, கால் புள்ளிதான், ஆதரவு தொடர்ந்தால் இந்திய சமுதாயத்திற்கு தான் வழங்கி வரும் சலுகைகளும் தொடரும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

ஒற்றுமைப் பொங்கல் திருவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே நஜிப் மேற்கண்டவாறு கூறினார்.