Home அரசியல் விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை – சாஹிட் எச்சரிக்கை

விசா முடிந்தும் மலேசியாவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கை – சாஹிட் எச்சரிக்கை

574
0
SHARE
Ad

zahidபுத்ரா ஜெயா, மே 23 – விசா காலம் நிறைவடைந்தும் தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பாக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக உள்துறையமைச்சர் டத்தோஸ்ரீ அகம்ட் சாஹிட் ஹமீடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை கண்டறிய குடிநுழைவுத் துறையைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுவருவதாகவும் சாஹிட் தெரிவித்துள்ளார்.

“விசா காலம் நிறைவடைந்தும் சட்டத்துக்குப் புறம்பாக மலேசியாவில் தங்கி வேலை செய்துவரும் பணியாளர்கள், தொழிபுரிவோர் மற்றும் மற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். விசா காலம் நிறைவடைந்து விட்டது என்றால் எங்களிடம் சரணடையுங்கள் நல்ல முறையில் உங்கள் பிரச்சனையைக் கையாளுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice