Home கலை உலகம் கிரிக்கெட் வீரர்களுடன் இணைத்து பேசுவதா?: லட்சுமிராய் ஆவேசம்

கிரிக்கெட் வீரர்களுடன் இணைத்து பேசுவதா?: லட்சுமிராய் ஆவேசம்

697
0
SHARE
Ad

LAKSHMI-RAIசென்னை, மே 24- சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகளை இணைத்து செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை லட்சுமிராய்பெயர் பலமாக அடிபடுகிறது. இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தூதுவராக இருந்துள்ளார். தன்னைப்பற்றி பரவும் செய்திக்கு லட்சுமி ராய் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஸ்ரீசாந்துடன் என்னை இணைத்து செய்தி வெளிவருவது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீசாந்துடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. டோனியுடன் பேசி பல வருடங்கள் ஆகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஆரம் பித்த போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் தூதுவறாக இருந்தேன். நயன்தாராவும் அப்பொறுப்பில் இருந்தார். அதன் பிறகு ஐ.பி.எல். அணியில் நான் இல்லை. டோனியுடன் என்னை இணைத்து பேசுவது சரியல்ல.

#TamilSchoolmychoice

கேரள கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக இருந்தது உண்மைதான். டைரக்டர் பிரியதர்ஷன் அழைத்ததால் அங்கு சென்றேன். கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவதால் என் பெயர்  பாதிக்கப்பட்டுள்ளது.

நான் தொழில் அதிபர் ஒருவரை காதலிக்கிறேன். சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. பொது நிகழ்ச்சியில் சந்தித்தோம். நட்பாக பழகினோம். பின்னர் காதலிக்க ஆரம்பித்துள்ளோம். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். எங்களுக்கு திருமணம் முடிவானதும் வெளிப்படையாக அறிவிப்பேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார்.