Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூரில் அதிகரித்து வரும் ‘நெஸ்ட்லே’ முதலீடு

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் ‘நெஸ்ட்லே’ முதலீடு

603
0
SHARE
Ad

Nestle_Logo-300x300மே 24- சுவிட்சர்லாந்திலுள்ள ‘நெஸ்ட்லே’ நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக சுமார் நான்கு மில்லியனனை ஒதுக்கியுள்ளது.

ஆசிய பசிபிக் பகுதிகளில் விரைந்து வளர்ந்து வருகின்ற சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் நெஸ்ட்லே இந்தப் பணிகளை விரிவாக்கியுள்ளது.

சிங்கப்பூரில் உருவாகும் இதன் பணிக்காக 17 நாடுகளில் இருந்து இயந்திரப் பொறியியல், நுண்ணுயிரியல் போன்ற துறைகள் சார்ந்த நிபுணர்களை நெஸ்ட்லே அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

நெஸ்கஃபே காபித்தூள் மற்றும் மைலோ பால்பவுடர் போன்றவற்றை உலக அளவில் விற்பதற்காக இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவை விரிவாக்கவுள்ளது.

இப்பிரிவின் தலைவர் ஜோஹான்ஸ் பேஞ்ச்(Johannes Baensch) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சத்துக்களுடன் கூடிய புதிய ஆரோக்கியமான உணவுப் பொருளைக் கண்டுபிடிக்க இந்தப் பிரிவு முனைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய முறையில் தயாரிக்கப்படும் இந்த உணவுப் பொருளில் இனிப்பு, உப்பு, கொழுப்பு ஆகியவை குறைவாகப் பயன்படுத்தப்படும். ஆனால் நல்ல சுவையுடன் தயாரிக்கப்படும். இச்சுவை உள்ளூர்ச் சுவையுடன் ஒத்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெஸ்ட்லே கடந்த 1980ம் ஆண்டு ஆசியாவில் முதன்முதலாக சிங்கப்பூரில் தான் தனது கிளையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.