இங்கிலாந்து, மே 24- இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் சுமார் 212 மில்லியன் பவுண்ட் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு, ராணி இரண்டாம் எலிசபெத் சிறப்பு ரயில் மூலம் வந்திருந்தார்.
விழா நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவர் பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்தில் செல்ல விருப்பம் தெரிவித்தார்.
இதையடுத்து, விழா நடக்கும் இடத்திற்கு ராணி மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்தார். இதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.