Home அரசியல் ம.இ.கா கட்சித் தேர்தல்கள் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு!

ம.இ.கா கட்சித் தேர்தல்கள் அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைப்பு!

587
0
SHARE
Ad

palani-sliderமே 24 – மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய ம.இ.கா மத்திய செயற்குழுக் கூட்டம் எவ்வித சலசலப்பின்றி முடிந்தது என்பதோடு, கட்சியின் தேர்தல்களும் எந்தவித எதிர்ப்புமின்றி அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்திய சமுதாயத்தில் கட்சியின் நிலையை மேலும் வலுவாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நோக்குடன், அந்த நோக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் கட்சியின் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதாக ம.இ.கா  தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்துள்ளார்.

கட்சியின் தேசியத் தலைவருக்கான  தேர்தலும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் நடைபெறும்.

கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள், தேசிய உதவித் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலும் அடுத்த வருடம் நடைபெறுமென இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது பழனிவேல் தெரிவித்தார்.

இருப்பினும், கட்சியின் கிளைக்கூட்டங்கள் இந்த வருடத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சித் தேர்தல்களை ஒத்திவைக்கும் தனது இந்த முடிவுக்கு மத்திய செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.