வீடு ஒதுக்கி 6 மாதமாகியும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாடுவதாகவும், இதனால்தான் பிரதமர் அங்கு குடியேறவில்லை என்றும் தகவல் வெளியானது.
இதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டும். பிரதமர் அங்கு குடியேறாததால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, தாமதம் ஏற்பட்டுள்ளன. எனவே இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சரவை சார்பில் பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பிரதமர் அந்த வீட்டில் குடியேறாததற்கு பேய் பீதி காரணம் அல்ல என்று மட்டும் கூறப்பட்டுள்ளத