Home உலகம் அமெரிக்க நீதிபதியான இந்தியருக்கு ஒபாமா பாராட்டு!

அமெரிக்க நீதிபதியான இந்தியருக்கு ஒபாமா பாராட்டு!

522
0
SHARE
Ad

srinivasanஅமெரிக்கா, அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியில் வந்த சண்டிகரைச் சேர்ந்த சீனிவாசனுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியில் வந்த சண்டிகரைச் சேர்ந்தவர் பிரபல வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சீனிவாசன். இவரை கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். இதற்கு நீதித்துறை செனட் சபை 97-0 என்ற ஓட்டெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நீதிமன்றம் ஒன்றில் தென் ஆசியாவைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தரப்பிலிருந்தும் சீனிவாசனுக்குப் பாராட்டுக்கள் குவியும் நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சீனிவாசனைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

#TamilSchoolmychoice

“ஸ்ரீகாந்த் சீனிவாசன் அமெரிக்காவில் பிரின்சிபல் உதவி சொலிசிடர் ஜெனரல் உள்பட பல பொறுப்புகளில் 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர். அமெரிக்க நாட்டு வரலாற்றில் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்களில் சீனிவாசனே முதல் தடவையாக நீதிபதியாகும் பெருமையை பெற்றுள்ளார்.

பண்பாளரான அவர் அமெரிக்காவின் தனிச்சிறப்பை பாதுகாக்க உழைப்பார். நீதித்துறையில் அவர் தனி முத்திரை பதிப்பார் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.