Home இந்தியா திருப்பதி கோவில்- தலைமுடி மூலம் வருமானம் 107 கோடி ரூபாய்!

திருப்பதி கோவில்- தலைமுடி மூலம் வருமானம் 107 கோடி ரூபாய்!

669
0
SHARE
Ad

temple front view-753526திருப்பதி, மே 26-  ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் அளித்த முடிகாணிக்கை மூலம் ரூ.107 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு அறிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கும் முடி காணிக்கையை 3 அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை ஏலம் விடுவது வழக்கம்.

கடந்த வியாழக்கிழமை இரவு காணிக்கை முடி ஏலம் விடப்பட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.107 கோடி வருமானம் கிடைத்ததாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடி வியாபாரத்தின் மூலம் 130 கோடி ரூபாய் தேவஸ்தானத்துக்கு வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.