Home வணிகம்/தொழில் நுட்பம் கூகுள் இணையதளம் மூலம் இனி பணம் அனுப்பலாம்

கூகுள் இணையதளம் மூலம் இனி பணம் அனுப்பலாம்

622
0
SHARE
Ad

googleகோலாலம்பூர், மே 27- கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், படங்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் போய் இப்போது கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து விட்டது.

கூகுள் இணையதளம் சர்வதேச அளவில் புகழ் பெற்றதாக உள்ளது. மின் அஞ்சல் அனுப்புவதற்கு அதிகளவில் இடவசதி அளித்து புரட்சி ஏற்படுத்தியது இதுதான்.

பின்னர் அதிவேக செயல்பாடு மூலமும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் கூகுள் மின் அஞ்சலில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்நிறுவனம் இப்போது பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ. கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.

முதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கடன் (கிரெடிட்), பற்று (டெபிட்) அட்டை மூலமும் பணத்தை அனுப்பலாம்.

இதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. யாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு மின் அஞ்சல் கடிதம் எழுதி, அதை இணைப்பு குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும்.

பின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு அனுப்பு அழுத்தியை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும்.

இந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மின் அஞ்சல் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் ‘வாலட்டில்’ கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.