Home 13வது பொதுத் தேர்தல் அழியா-மை விவகாரம் தொடர்பாக அன்வார், வான்அஸிசா காவல்துறையில் புகார்

அழியா-மை விவகாரம் தொடர்பாக அன்வார், வான்அஸிசா காவல்துறையில் புகார்

509
0
SHARE
Ad

anwar-wan-azizahபெட்டாலிங் ஜெயா, மே 27 – பொதுத்தேர்தலில் அழியா ‘மை’ அழிந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிசா ஆகியோர் இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

டிராப்பிக்கானா மெர்சென்ட்டில் உள்ள பிகேஆரின் தலைமை அலுவலகத்திற்கு அருகே உள்ள காவல்நிலையத்தில் இப்புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அன்வார் கூறுகையில், “காலை 9.30 மணியளவில் நாங்கள் வாக்களித்தோம் ஆனால் மாலை 5 மணிக்குள் எங்கள் விரலில் இடப்பட்ட மை அழிந்துவிட்டது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மை 5 நாட்கள் வரை அழியாது என்று தேர்தல் ஆணையம் உத்திரவாதம் கொடுத்தது. ஆனால் வாக்களித்த சில மணி நேரங்களில் தடவப்பட்ட அடையாளமே இல்லாத அளவிற்கு மை அழிந்துவிட்டது.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக பக்காத்தானின் பேரணிகள் தொடரும் என்று குறிப்பிட்ட அன்வார், அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.