Home நாடு இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – ராமசாமி உறுதி

இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – ராமசாமி உறுதி

629
0
SHARE
Ad

penang-p.ramasamyபிறை, மே 28 – இந்தியர்கள் மத்தியில் வேலையில்லாமல் தவிப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. அதை நிவர்த்தி செய்து அவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது தான் தனது முக்கிய அங்கம் என்று பினாங்கு மாநில துணை முதல்வரான பி.ராமசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் “பினாங்கு மாநிலத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கு பதிலாக நேரடி வேலை வாய்ப்புகளை வழங்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அவை செயல்பட்டு வருகின்றன. நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஒப்பந்தக்காரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து செலவைக் கட்டுப்படுத்தலாம் அதோடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் வேலையில் அமர்த்துவது குறையும்.” என்று ராமசாமி தெரிவித்துள்ளார்.

இது தவிர பினாங்கு மாநிலத்தில் சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அம்மாநில அரசு திட்டங்களுக்கான ஏலம் சில இந்தியர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“பொதுத்தேர்தலில் 80 சதவிகித வாக்காளர்கள் பக்காத்தானுக்கு வாக்களித்து மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இப்போது வாக்காளர்களுக்கு நாங்கள் அளித்திருந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த முறை இருந்த பக்காத்தான் ஆட்சியை விட மேலும் சிறப்பான ஆட்சியை இம்முறை வழங்குவோம்.” என்றும் ராமசாமி உறுதியளித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்ற தொகுதியில் ஜசெக சார்பில் போட்டியிட்ட  பேராசிரியரான ராமசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட மஇகாவைச் சேர்ந்த எல்.கிருஷ்ணனை 7, 959 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அதோடு ஒரு மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் பதவியை  ஏற்றிருக்கும் –  அதிலும் இரண்டாவது தவணையாக ஏற்றிருக்கும் –  முதல் மலேசிய இந்தியர் டாக்டர் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.