Home கலை உலகம் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதிய 2 திரைக்கதைகள் இந்தியில் படமாகிறது

ஏ.ஆர்.ரஹ்மான் எழுதிய 2 திரைக்கதைகள் இந்தியில் படமாகிறது

647
0
SHARE
Ad

ar-rahmanமே 29- இசையில் ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கதாசிரியராக மாறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சினிமாவுக்கு கதை எழுதும் ஆர்வம் ஏற்கனவே இருந்தது. அமெரிக்காவில் திரைக்கதை எழுதுவது பற்றி படித்தார்.

ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதற்காக அங்கு சென்றபோது இதனையும் படித்து முடித்தார்.

#TamilSchoolmychoice

மூன்று வருடங்களுக்கு ஒரு கதையை எழுத ஆரம்பித்தார். தற்போது இரண்டு திரைக்கதைகளை எழுதி முடித்துள்ளார். இந்தி இயக்குனர்களிடம் கதைகளை சொல்லி உள்ளார். அவர்களும் அதனை படமாக்க இசைவு தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைப்பார் என தெரிகிறது. நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களை தேர்வு செய்த பிறகு படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர். தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படங்களை எடுக்க ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.