Home உலகம் அமெரிக்காவுக்கு புதிய பொருளாதார வல்லுனர்- ஜனாதிபதி ஒபாமா முடிவு

அமெரிக்காவுக்கு புதிய பொருளாதார வல்லுனர்- ஜனாதிபதி ஒபாமா முடிவு

499
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், மே 30- அமெரிக்க நாட்டின் தலைமை பொருளாதார வல்லுனராக ஆலன் குரூகர் இருந்து வருகிறார்.

இவரை மாற்றி விட்டு புதிய பொருளாதார வல்லுனராக ஜேசன் பன்மேனை நியமிக்க ஜனாதிபதி ஒபாமா முடிவு எடுத்துள்ளார்.

இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து இதுவரை இவர் ஒபாமாவிற்கு பொருளாதார ஆலோசனைகளை கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தபோது, அதில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற வரிக்கொள்கைகளை வகுத்து தந்தவர் இந்த பன்மேன்தான்.