Home இந்தியா சிறையில் ஸ்ரீசாந்தின் முதல்நாள் அனுபவம்- இரவில் தூங்கவில்லை

சிறையில் ஸ்ரீசாந்தின் முதல்நாள் அனுபவம்- இரவில் தூங்கவில்லை

551
0
SHARE
Ad

sreesanthபுதுடெல்லி, மே30- கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கடந்த 16-ந் தேதி கைதான ஸ்ரீசாந்த், 10 நாட்களுக்கு மேலாக போலீஸ் காவலில் இருந்தார்.

நீதிமன்றத்தின்  உத்தரவுப்படி, நேற்றுமுன்தினம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். முதலாம் எண் திகார் சிறையில்  அடைக்கப்பட்டார்.

அவர் அதிகமாக பேசிக் கொள்ளவில்லை. 2 விசாரணை கைதிகள் இருந்த சிறிய அறையில் அவர் அடைக்கப்பட்டார். அவருக்கு மெத்தையும், போர்வையும் வழங்கப்பட்டது. மற்ற கைதிகளைப் போல, அவரும் வரிசையில் நின்று இரவு உணவை வாங்கி சாப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இரவில், அவர் அவ்வளவாக தூங்கவில்லை. உட்கார்ந்தபடியும், நடந்தபடியும் பொழுதைக் கழித்தார். நேற்று காலையில், தேநீர் அருந்தி, பிஸ்கட்டுகள் சாப்பிட்டார். அவருடன் கைதான அஜித் சாண்டிலாவும், மற்றொரு எண் கொண்ட திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்னொரு வீரர் அங்கீத் சவான், ஏற்கனவே சிறையில் இருந்து வருகிறார். மூவருமே, தலா 2 விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தகவல்களை திகார் சிறையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.