இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது. தற்போது விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது.
இப்படத்தையும் கமலே நடித்து இயக்குகிறார். இதில் கமலுடன் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது தாய்லாந்தில் சண்டை காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாகி வருகிறது.
ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை வைத்து அதிரடி காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதன் பிறகு பாங்காக்கிலும் படப்பிடிப்பு நடிக்கிறது.
தீபாவளிக்கு விஸ்வரூபம்-2 படத்தை வெளியீடு செய்ய திட்ட மிட்டுள்ளனர்.