Home கலை உலகம் பத்தாம் வகுப்பு தேர்வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் லட்சுமி மேனன்

பத்தாம் வகுப்பு தேர்வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் லட்சுமி மேனன்

502
0
SHARE
Ad

lakshmi-menonசென்னை, ஜூன்3- ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன்.

பின்னர் ‘கும்கி’, தற்போது வெளியாகியுள்ள ‘குட்டிப்புலி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘மஞ்சப்பை’ உள்ளிட்ட 6 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

லட்சுமி மேனன் நடிக்க வந்தபோது 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இவர் நடிக்க வந்து 1 வருடம் ஆகிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-வகுப்பு இறுதி தேர்வை எழுதினார். ‘மஞ்சப்பை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பிலிருந்து ஒரு மாதம் விடுமுறை எடுத்து இந்த தேர்வை எழுதி முடித்தார்.

#TamilSchoolmychoice

சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் லட்சுமி மேனன் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. சினிமாவில் அதிர்ஷ்டம் இருந்ததால் நான் நடித்த மூன்று படங்களும் பெறும் வெற்றி பெற்றன.

அந்த அதிர்ஷ்டம் படிப்பிலும் இருக்கிறது. சாதாரணமாகத்தான் படித்தேன். சுமாராக எழுதினேன். ஆனால் நல்ல மார்க் வந்திருக்கிறது. இதனால் மேலும் படிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார்.